Wednesday, 15 June 2011

இது ஞாயமா கண்ணே

இது ஞாயமா கண்ணே

நேற்று வரை நாம் எங்கு சென்றாலும்

சேர்ந்தே        சென் ரோமே     

மே மாதம் கல்லூரியின் கடைசி நாள் கூட

சேர்ந்து தானே சுற்றினோம்

இன்று நீ மட்டும் முது நிலை படிக்க

வேறு கல்லூரிக்கு போகிறாயே

நான் டிகிரி முடித்த பின்பல்லவா

இனி உன்னுடன் சேர முடியும்

இது ஞாயமா கண்ணே

Tuesday, 17 May 2011

PENGAL

குழந்தை

ஆசைப் படும் வீட்டில்

அனேகமாக பிறக்காத இவளுக்கு 

எங்கோ கள்ளிப்பால் காத்திருக்குதாம்


சிறுமி

தினுசு தினுசாய் அதிகம் பழசாகாமல் 

இப்பொழுதெல்லாம் எங்கள்  குழந்தை களுக்கும்

கிடைக்கின்றன புது டிசைன் துணி மணிகள்

எங்கள் எஜமானி அம்மாக்கள் 

குடும்பக் கட்டுப்பாடு  செய்து  கொண்டதால்    

அடுத்த குழந்தைக்கு ஆகும் என்று அதை

அவர்கள்  எடுத்து வைப்பது இல்லை

அந்த குழந்தை களின் பள்ளிச்

சீருடைகளும் ஒரு காரணமோ



மங்கை


நேற்றுவரை எல்லா வற்றிக்கும் 

தேவை  யாய் இருந்த  அம்மா 

இப்பொழுது மட்டும் கசப்பதேன் 

என் காதல் விஷயங்களை

கண்டு பிடித்து  விட்டதாலோ 

எப்படித்தான் தெரிந்து  கொண்டா ளோ      



பேரிளம் பெண்


எவ்வளவு பெரிய்ய எழுத் தாளர்  ஆனால்  என்ன 

என் விமர்சனத்தை  தானே  முதலில் 

எதிர்ப்பார்க்கிறார்  என் கணவர் 


எல்லா வெற்றி  யாளர் களுக்கும் 

பின்னால்  இல்லைப் பெண்   

உயிர் தோழி யாய் அன்றோ

இருக்கிறாள் பெண்





கிழவி


எங்கோ பிறந்து அங்கிருந்து

வேரோடு  பிடுங்கி எடுத்து வரப்பட்டு

எங்கோ நட்டார்கள் என்னை

எத்தனையோ புயல் மழை பார்த்து

வைரம் பாய்ந்த மரமாகி விட்ட என்

கிளைகளில் இன்று ஒரு பறவையும் இல்லை

இப்பொழுதெல்லாம் நான் பூத்து   காய்ப்பது இல்லை


விறகிர்க காவது பயன் படு    வேனே 

ஏன் யாரும் தேடி வருவதில்லை