குழந்தை
ஆசைப் படும் வீட்டில்
அனேகமாக பிறக்காத இவளுக்கு
எங்கோ கள்ளிப்பால் காத்திருக்குதாம்
சிறுமி
தினுசு தினுசாய் அதிகம் பழசாகாமல்
இப்பொழுதெல்லாம் எங்கள் குழந்தை களுக்கும்
கிடைக்கின்றன புது டிசைன் துணி மணிகள்
எங்கள் எஜமானி அம்மாக்கள்
குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டதால்
அடுத்த குழந்தைக்கு ஆகும் என்று அதை
அவர்கள் எடுத்து வைப்பது இல்லை
அந்த குழந்தை களின் பள்ளிச்
சீருடைகளும் ஒரு காரணமோ
மங்கை
நேற்றுவரை எல்லா வற்றிக்கும்
தேவை யாய் இருந்த அம்மா
இப்பொழுது மட்டும் கசப்பதேன்
என் காதல் விஷயங்களை
கண்டு பிடித்து விட்டதாலோ
எப்படித்தான் தெரிந்து கொண்டா ளோ
பேரிளம் பெண்
எவ்வளவு பெரிய்ய எழுத் தாளர் ஆனால் என்ன
என் விமர்சனத்தை தானே முதலில்
எதிர்ப்பார்க்கிறார் என் கணவர்
எல்லா வெற்றி யாளர் களுக்கும்
பின்னால் இல்லைப் பெண்
உயிர் தோழி யாய் அன்றோ
இருக்கிறாள் பெண்
கிழவி
எங்கோ பிறந்து அங்கிருந்து
வேரோடு பிடுங்கி எடுத்து வரப்பட்டு
எங்கோ நட்டார்கள் என்னை
எத்தனையோ புயல் மழை பார்த்து
வைரம் பாய்ந்த மரமாகி விட்ட என்
கிளைகளில் இன்று ஒரு பறவையும் இல்லை
இப்பொழுதெல்லாம் நான் பூத்து காய்ப்பது இல்லை
விறகிர்க காவது பயன் படு வேனே
ஏன் யாரும் தேடி வருவதில்லை